இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் உணவுகளை பகிர்ந்து கொண்ட காசா மக்கள்!

Date:

புனித ரமழான் மாதம் தொடங்கிவிட்டது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள், பிரார்த்தனை மற்றும் வழிபாட்டில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

 

ஆனால், காஸா முஸ்லிம்களுக்கு, இந்தப் புனித மாதம் மனவேதனை மற்றும் துக்கம் நிறைந்ததாக காணப்படுகிறது.

இப்போது ஐந்து மாதங்களுக்கும் மேலாக, இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைகள், நோய், பட்டினி மற்றும் தாகத்தை அனுபவிக்கின்றார்கள்.

ரமழான் தொடங்கியும் அதன் வன்முறையும், கொடூரமும் நிற்கவில்லை அல்லது குறையவில்லை.

புனித மாதத்திற்கான ஏற்பாடுகள் எப்போதும் முன்கூட்டியே தொடங்கும். அதற்கு பல வாரங்கள் முன்னதாகவே, மக்கள் நோன்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க வெளியே மக்கள் செல்வார்கள்.

இடிபாடுகளுக்கு மத்தியில் காசா மக்கள் இப்தார் உணவுகளை பகிர்ந்துகொண்டனர்.

இஸ்ரேல் இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உணவு விநியோகத்தில் கட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்கள் மக்கள் ரமழான் மாதத்தின் முதல் நாளில் நோன்பு துறக்கும் முன், ஒரு தொண்டு நிறுவனத்தால் உணவை பெற்றுக்கொண்டனர்.

காசாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடும் நோய்களும் பல உயிர்களைக் கொன்று வருகின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 20 பேர் இறந்ததாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்னும் பலர், மருத்துவ வசதிகளை அடைய முடியாமல் ‘அமைதியாக இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றும் சட்டிக்காட்டியுள்ளது.


 

Popular

More like this
Related

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...