இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும்!

Date:

கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை நேற்றைய தினம் குருணாகல் மாவட்டத்தில் பதிவானது.

குறித்த மாவட்டத்தில் 38.5 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலையானது 37 பாகை செல்லியஸ் ஆகும்.

எனினும், அதனை காட்டிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...