இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து (21) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...