அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் நேற்று (20) சான்றுரைப்படுத்தியதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்)” மற்றும் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, இந்த சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக நேற்று (20) முதல் நடைமுறைக்கு வருகின்றன.