1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்றுவது மற்றும் சர்வதேச கடன் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி உரையாற்றினார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் திட்டத்தை உயர்த்துவது போன்ற விடயங்கள் பற்றி விபரிக்கிறார்.
விவசாயத்துறை முன்னேற்றம் அதற்கான உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களுக்குரிய வற் வரிகள் போன்றவற்றை குறைப்பது பற்றியும் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டார். .