இலங்கையில் ரமழான் தலைப்பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

Date:

புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை (12) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது. இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை பிறை தென்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து நோன்பு நாளை முதல் ஆரம்பமாகும் என பிறைக்குழு அறிவித்துள்ளது.

தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாட்டில்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...