சைப்பரஸில் இருந்து உதவிபொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்று இன்று காஸா நோக்கிப் பயணித்துள்ளது.
பைலட் திட்டத்தின் அடிப்படையில் ஸ்பெய்ன் நாட்டின் தொண்டு நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் இன்று சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 200 டொன் நிறையுடைய உதவிப்பொருட்கள் கப்பலில் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சைப்பிரஸில் மேலும் 500 தொன் உதவிப்பொருட்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாலை வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு காசாவில் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும்போது பாராசூட் செயல்படாமல் உணவு பொட்டலங்களுடன் மக்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.
இதற்கிடையே லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் அன்ட்ரேஸ் காசாவிற்கு உணவு பொருட்கள் சேகரித்து வழங்க முடிவு செய்தார். அவரது அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டது.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கப்பல் காசா சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாத போரில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில், பெரும்பாலான மக்கள் தங்களது தங்களது வீட்டில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.