ஈஸ்டர் தாக்குதலுக்கு 5 வருடங்கள்: ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதி கோரிய பேராயர்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 5 வருடங்கள் ஆகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் காணொளி ஊடாக கர்தினால் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவருக்குமான வெளிப்படையான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் செயன்முறையின் தோல்வி குறித்தும் அவர் இதன்போது கவலை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இன்று வரை பல்வேறும் மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்காக தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் நடந்த அனைத்து விதமான கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றிய வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு தேசத்தையும் அனைத்து விடயங்களிலும் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்துமாறும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...