கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்: நிதி இராஜாங்க அமைச்சர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை நிறைவு செய்து மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் எக்ஸ் வலைத்தளபதிவில் ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாட்டிற்கு வருகைதந்துள்ள சர்வதெச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் மீளாய்வு பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்து பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையினை எட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2023 ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிவரையிலான நிலவரம் தொடர்பாக 2 வாரங்களுக்கு மீளாய்வு செய்யப்படவுள்ளதுடன் மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகள் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம் காணப்படுவதுடன் கடன்வழங்குனர்களுடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் வலைத்தளப்பதிவில் நிதிராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...