தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப்பணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பிரேரணையொன்றை முன் வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போதுள்ள கட்டுப்பணம் குறைவானதாக காணப்படுவதால் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவ்வாறு வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் அவசியம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகளை தடுக்கும் வகையில் தற்போதும் நடைமுறையிலுள்ள விரலுக்கு மை பூசுவதை இரத்துச்செய்யவும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தேர்தலுக்கு தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவின தொகை வித்தியாசப்படும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதுதொடர்பான வழிகாட்டல் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவி ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.