இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்.


