குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்?: முஸ்லிம் மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

Date:

இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

புனித ரமழான் நோன்பு காலத்தில் தொழுகையில் ஈடுபட்டதன் காரணமாக தீவிர வலதுசாரி குழுவினால் இந்த மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் குஜராத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சு உறுதியளித்துள்ளது.

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது முஸ்லிம் மக்கள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 3000 இற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிய இந்துத்துவ கொள்கையோடு நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.

இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்களில் ஒருவரான நௌமன் பிபிசி செய்திச் சேவையிடம் பேசுகையில், “வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்குவது தற்போது பெரும் சவாலாக உள்ளது.

சர்வதேச மாணவர்கள் தங்கும் விடுதி இது. இவர்கள் இங்கு எப்படி கூட்டம் கூட்டமாக வந்தனர் என்பது விசாரணைக்கு உரியது.

அவர்கள் இங்கு அடிக்கடி வந்து, ’ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்’ என்று கூறிய சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.

மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இங்கு பெரும் ஆபத்து உள்ளது” என கூறினார்.

இதுதொடர்பாக, ஆமதாபாத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். எனினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சனிக்கிழமை இரவு முதல் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதில், தாக்குதல் கும்பல் மாணவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதையும் கற்களை வீசியதையும் காண முடிந்தது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதவாத முழக்கங்களை எழுப்பியதையும் கேட்க முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை முழு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஆமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஜி. எஸ். மாலிக்கும் சம்பவ இடத்திற்கு வந்தார். இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“இந்த விடுதியில் சுமார் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர். இரவில், சில மாணவர்கள் வராண்டாவுக்கு வெளியே தொழுகை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் வந்து மாணவர்களிடம் ஏன் இங்கு பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டனர்” என்கிறார் அவர்.

பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது என காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

மூலம்: பிபிசி

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...