கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 20 வருடங்களாக சுத்தம் செய்யப்படாத நீர்த்தாங்கிகள்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர்த்தாங்கி உள்ளிட்ட நீர்த்தாங்கிகள் சுத்தம் செய்யப்படாதுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது 161 நீர் தாங்கிகள் உள்ள நிலையில் சுமார் 20 வருடங்கள் இவை சுத்தம் செய்யப்படவில்லையென ருக்‌ஷான் பெல்லன சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த நீர்த்தாங்கிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் சுத்தம் செய்யப்பட்டமைக்கான எவ்வித சாட்சியமும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரப் பரிசோதகர்கள் இதுதொடர்பில் கவனம் செலுத்தாமை குறித்து வைத்தியர் கவலை வெளியிட்டிருந்தார்.

பற்றீரியா அளவுகளை சரிபார்ப்பதற்கு வருடந்தோறும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (எம்ஆர்ஐ) நீர் மாதிரிகள் அனுப்பப்படுகின்ற போதிலும் இவை மாத்திரம் நீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு போதாது என தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நீரை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்கள் சுகாதார ரீதியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய நீரின் பயன்பாட்டினால் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் பாதிக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லான மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...