சஜித், சொந்தக் கட்சி உறுப்பினர்களையே புறக்கணிக்கிறார்: குளியாப்பிட்டியில் ஜனாதிபதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணித்து, வெளியாட்களுக்கு செவிசாய்த்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்குபற்ற போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாச உண்மையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்ற தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்கவும் ஓரங்கட்டவும் ஆரம்பித்துவிட்டார் என ஜனாதிபதி   தெரிவித்தார்.

“டாக்டர். டி சில்வா, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறு என்னிடம் கோரினார். அதன்படி IMF மற்றும்  பிரதிநிதிகளை சந்திப்பதில் எங்களுடன் இணைந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தேன்.

எவ்வாறாயினும், அந்தக் கூட்டங்களில் பங்கேற்க தமது கட்சி விரும்பவில்லை என சஜித்  பிரேமதாச என்னிடம் தெரிவித்தார். எனது கோரிக்கையை புறக்கணிக்குமாறு பிரேமதாசாவை ஊக்குவித்தவர் ஜி.எல்.பீரிஸ்.

பிரேமதாச உண்மையில் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்.  எனவே கடந்த காலங்களில் என்னை எதிர்த்தவர்களை எம்முடன் இணையுமாறு அழைக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...