சீன பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன 6 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்ததுடன், அங்கு அவருக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சியின் (CPC) உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.