சர்வதேச அளவில் பிரபலமிக்க McDonald’s நிறுவனம் ‘சுகாதாரமின்மை’ என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முழுவதும் உள்ள 12 – McDonald’s உணவகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.
அமெரிக்க துரித உணவு நிறுவனமான McDonald’s தமது உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததையடுத்து குறித்த உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
1998இல் இலங்கையில் Mc Donald’s நிறுவனம் நுழைந்த பின்னர் உரிமம் பெற்றுள்ள Abans நிறுவனம் 12 கடைகளை நடத்தி வருகிறது.
‘ப்ரென்ச் ஐயிஸ்’ எனும் முறையின் கீழ் Mc Donald’s மற்றும் Abans இடையே ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த நிறுவனத்தை Abans இலங்கையில் நிறுவி வழிநடத்தியது.
‘ப்ரென்ச் ஐயிஸ்’ எனும் உடன்படிக்கையில், Mc Donald’sசின் பெயரையோ அல்லது அவர்களின் அடையாளத்தையோ மாற்ற கூடாது என்பது பிரதானமாகும்.
மேலும் அவர்கள் குறித்த உணவு செய்முறைக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சுகாதார ரீதியாக பல விதிமுறை மீறல், தரமான உணவு வழங்காமை, வாடிக்கையாளர் அதிருப்தி என்பன முறைப்பாடுகளாக வருகின்றமையினாலேயே இன்று McDonald’sக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளை பொருத்தவரை மிகவும் கட்டுப்பாடு நிலவுகின்றது. சுகாதாரமற்ற உணவகங்கள் உடனடியாக சீல் வைக்கப்படும்.
இலங்கையில் உணவு பாதுகாப்பு என்பது – பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைகளில் ஒன்றாகும். ஆனால், சுகாதார பரிசோதகர்கள் மீதும் இலஞ்சம் ஊழல் மோசடி முறைப்பாடுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சரியாக குறிப்பிட வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் செய்திருக்க வேண்டிய ஒரு வேலையை தற்போது அமெரிக்கா தலையிட்டு செய்திருக்கின்றமையானது இலங்கைக்கே தலைகுனிவாகும்.
மூலம்: ஆங்கில ஊடகம்