நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி காலை 6.30 முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதுடன், ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.