ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மனித பண்பாடுகளின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் காசா விடயத்தில் மேற்கொள்கின்ற மோசமான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
‘பாலஸ்தீன அரசுக்கு ஸ்பெயினின் அங்கீகாரத்தை வழங்க நான் முன்மொழிகிறேன்,’ நான் இதை தார்மீக நம்பிக்கையுடன் செய்கிறேன், ஒரு நியாயமான காரணத்திற்காகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக வாழ ஒரே வழி இதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.