சூரிய சக்தியில் இயங்கும் நடமாடும் மருத்துவமனை!

Date:

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தில் இருந்து நாட்டின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இரண்டரை மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தொகை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 3 நடமாடும் அம்சமும் இதில் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடமாடும் அலகுகளும் சூரிய சக்தியில் இயங்கும் மருத்துவமனையுடன், மகளிர் மருத்துவ பிரிவு மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு அவசர நிலையிலும் தேவையான பிரதேசங்களில் சுகாதார சேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தயாராக உள்ள இந்த நடமாடும் வாகனங்களின் பெறுமதி ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...