8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவை (AI) கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் இந்த முன்னோடி திட்டம் 20பாடசாலைகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தும் முன்னோடி திட்டத்தை கல்வி அமைச்சு இன்று தொடங்கியுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் இப்பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..