துருக்கியில் படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு!

Date:

துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏராளமான அகதிகளிடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கடலில் மூழ்கியபோது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டதுடன் மேலும் 2 போ் நீந்திக் கரை சோ்ந்தனா்.

இந்த விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகொப்டா்கள், ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...