நாடளாவிய ரீதியில் வறட்சி நீங்கி, மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

Date:

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம்கள் புனித ரமலான் மாத நோன்பை மிகவும் சிரமத்துடன் நோற்று வருகின்றனர். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது அதன் போதாமை காரணமாக பயிர் பச்சைகள் இறந்து, கால்நடைகள் உட்பட ஏனைய உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகள் போதுமான நீர் இன்றி தடைப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற அசாதாரண நிலைமைகளில் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழிமுறையாகும். அதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

எனவே, எமது பாவங்களுக்காக நாம் தௌபா, இஸ்திஃபார் செய்து, வீண் விரயங்களைத் தவிர்த்து தானதர்மங்கள் செய்வதுடன் நாடளாவிய ரீதியில் வறட்சி நீங்கி, மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை வேண்டி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன் என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான்.

மேலும் பொருட்களையும் குழந்தைகளையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.’ (ஸூறா நூஹ்: 10 – 12)என இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...