நாடளாவிய ரீதியில் பரவலாக காணப்படும் 40, 000க்கும் அதிகமான போலி வைத்தியர்களை கண்டுபிடிக்க சோதனைகள் மேற்கொள்ள, அவர்களுக்கான அபராதத் தொகை மற்றும் சிறை தண்டனை வழங்குவதற்காக 12 பேருடன் கூடிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வைத்திய நிலையத்திலிருந்தும் அனுமதி வழங்கப்படும் சான்றிதழின்றி போலி வைத்தியர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் தவறான மருந்துகளை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
மேலும், வைத்தியர்களின் பற்றுச்சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கும் மருந்தகங்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.