முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நாளை முதல் உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை உணவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபாவை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்துள்ளது.