பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீப்பரவல்: 43 பேர் உயிரிழப்பு

Date:



பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று உள்ளூர் நேரப்படி சுமார் 1.10 மணியளவில் உணவகம் ஒன்றில் தீப்பிடித்தது.

7 மாடிகளை கொண்ட அந்த கட்டடத்தில் பல உணவகங்கள், துணி மற்றும் செல்போன் விற்பனை தொடர்பான பல கடைகள் உள்ளன.

இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, அடுத்தடுத்த தளங்களும் முழுவதும் பற்றி எரிந்தன.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில், 75 பேர் மீட்கப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 43 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 11 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலியானவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

சுமார் இரண்டுமணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...