பண்டிகை காலத்தை முன்னிட்டு 3,000 சுகாதார பரிசோதகர்கள் விசேட நடவடிக்கையில்…!

Date:

பண்டிகை காலத்தை முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

​​பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

“பொதுமக்கள் பண்டிகைக் காலத்துக்கான உணவுகளை வாங்க வரும்போது, ​​அவர்களுக்கு உணவு தயாரிக்கக் கொடுக்கப்படும் பொருட்கள், பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்படும் உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றைச் சரிபார்ப்போம்.

அதை பரிசோதகர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உணவு தயாரிக்கும் நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் திரு உபுல் ரோஹன மெலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...