பலஸ்தீன சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை:சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு

Date:

பலஸ்தினிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே வாரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவமானது சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம், சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமான என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்ட போது, பாதிப்பை ஏற்படுத்தலாம் என பதிலளித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் இதுவரை 30000 வரை காசாவில் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...