பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தல்!

Date:

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம்,  கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு கோரியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது. அதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலை சுமார் 37 பாகை செல்சியஸ் ஆக காணப்பட வேண்டும். தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மனித உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே மாணவர்களின் நலன் கருதி பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...