பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்: இன்று முதல் நடவடிக்கை

Date:

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிதாக நிறுவப்பட்ட இந்த 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...