மார்ச் 12 இயக்கம் ஜனநாயகத்திற்காகவும் நீதியான தேர்தலுக்காகவும் செயற்படும் ஒரு அமைப்பாகும்.
அந்தவகையில் இன்று (12ஆம் திகதி) மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் கிளையின் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று புத்தளத்தில் இடம்பெற்றது.
இதில் புத்தளம் பகுதியிலுள்ள தலைவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்ச்சியை அதன் தலைவர் ருமைஸ் அவர்கள் நடத்தி வைத்தார்.
இதன்போது மார்ச் 12 இயக்கம் எடுத்த 8 நிலையான கொள்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கள நிலைமைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டன.
புத்தியாகம ரத்தின தேரர், அருட்தந்தை யோஹான், சுந்தரராம குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கினர்.
மார்ச் 12 இயக்கம் நாட்டில் நியாயமான தேர்தல், தூய்மையான வேட்பாளர்களுக்காக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.