புத்தளத்தில் இன்று நடைபெற்ற மார்ச் 12 இயக்கத்தின் ஊடக சந்திப்பு

Date:

மார்ச் 12 இயக்கம் ஜனநாயகத்திற்காகவும் நீதியான தேர்தலுக்காகவும் செயற்படும் ஒரு அமைப்பாகும்.

அந்தவகையில் இன்று (12ஆம் திகதி) மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் கிளையின்  செய்தியாளர் சந்திப்பொன்று இன்று புத்தளத்தில் இடம்பெற்றது.

இதில் புத்தளம் பகுதியிலுள்ள தலைவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்ச்சியை அதன் தலைவர்  ருமைஸ் அவர்கள் நடத்தி வைத்தார்.

இதன்போது மார்ச் 12 இயக்கம் எடுத்த 8 நிலையான கொள்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கள நிலைமைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

புத்தியாகம ரத்தின தேரர், அருட்தந்தை யோஹான், சுந்தரராம குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கினர்.

மார்ச் 12 இயக்கம் நாட்டில் நியாயமான தேர்தல், தூய்மையான வேட்பாளர்களுக்காக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...