அரசாங்கத்தால் பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் இரண்டு புதிய சட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தார்.
பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், பாலின சமத்துவ சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.