உலகில் எந்த அனர்த்தங்கள் நடந்தாலும் உடனே முன்னின்று மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து இம்ரான் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளுக்கும் சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பலஸ்தீன் காஸா பிரச்சினை ஆரம்பித்தது முதல் பல கோடிக்கணக்கான அவசர உதவிகளை பணமாகவும் பொருட்களாகவும் மன்னர் சல்மான் நிதியத்தினூடாக வழங்கி வருகிறது.
குறிப்பாக இந்த புனித ரமழான் மாதத்தில் காஸா மக்கள் படும் கஷ்டங்கள், துன்பங்கள், உயிரிழப்புக்கள்,அவதிகள் அனைத்தையும் முன்னிட்டு மீண்டும் நாற்பது மில்லியன் அமெரிக்க டாலர்களை அவசரகால பண உதவியாக வழங்கியுள்ளது. அல்லாஹ் அந்த மக்களின் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வானாக.
இவ்வாறே எமது இலங்கை நாட்டிலும் பல மனிதாபிமான உதவிகளை சவூதி அரேபியா, இலங்கை சவூதி தூதரகத்தினூடாகவும், உலக முஸ்லிம் சம்மேளன சர்வேதேச நிவாரண அமைப்புக்களினூடாகவும் வழங்கி வந்துள்ளது , தொடர்ந்தும் வழங்கி வருகின்றது என்பதை நன்றியுடன் நினைவு படுத்துகிறோம்.
சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகள் அன்பளிப்புக்கள் என்றும் தொடர வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.