தரம் எட்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்க மார்ச் 19 முதல் வாய்ப்பு கிடைக்கிறது.
எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.