இஸ்ரேலிய இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள், காசா போர் மற்றும் பசி பட்டினி, சோகமான மனநிலையுடன் பலஸ்தீனியர்கள் ரமழான் பண்டிகையினை கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் பலஸ்தீனிய குடும்பம் ரமழானுக்கு தயாராகும் வகையில் தங்கள் கூடாரங்களை அலங்கரித்தது.
இந்நிலையில், ‘நாங்கள் ரமழானை உணரவில்லை, காஸாவில் நடக்கும் போர் அனைவரது மனதிலும் உள்ளது, காஸாவில் உணவு இல்லாததால் சாப்பிட முடியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், ஜெருசலேம் மிகவும் சோகமாக இருக்கிறது, என்று காசா பகுதியில் வாழும் உம் அம்மார் கூறுகிறார்.
அதேநேரம் கடந்த ஆண்டு, இதுபோன்ற நாட்களில், நான் ரமழான் அலங்காரங்களைத் தொங்கவிடுவதிலும், சுஹூர் (விடியலுக்கு முன்னைய உணவு) மற்றும் காலை உணவைத் தயாரிப்பதிலும் பல நாட்கள் பிஸியாக இருந்தேன்,’ என்று 44 வயதான பெண் நினைவு கூர்ந்தார்.
முஸ்லிம் புனித மாதத்தை வரவேற்கும் மன நிலையில் கூட இல்லை. எனது குழந்தைகளும் நானும் உணவுப் பற்றாக்குறையால் பெரும்பாலான நேரங்களில் பட்டினி கிடக்கிறோம்.
அவர்கள் சிறிதளவு உணவைக் கண்டால் அவர்களை நோன்பு நோற்க எப்படி ஊக்குவிப்பது என்று எனக்குத் தெரியவில்லை,’ என்று புனித மாதத்தில் இஸ்லாமிய மரபுகளின் நடைமுறைகளைப் பற்றி அவர் கலவையுடன் தெரிவித்துள்ளார்.