ரமழான் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பது தொடர்பில் சவூதி அரேபியாவின் அறிவித்தல்!

Date:

இன்று மார்ச் 10 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ரமழான் ஹிஜ்ரி 1445ஆவது வருடம் ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் முகமாக உள்ளூரில் வாழும் முஸ்லிம்கள் பிறை பார்க்குமாறு சவூதி அரேபியா அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரமழான் மாதத்துக்கான பிறை கண்டால் நோன்பு நோற்குமாறும் அவ்வாறு பிறை தென்படவில்லையெனில் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணித்து நிறைவு செய்துகொள்ளுமாறு குறித்த அறிவித்தலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெற்றுக் கண்களாலோ அல்லது தொலைநோக்கியைப் பயன்படுத்தியோ பிறையைக் காணும் பட்சத்தில் அதனை உடனடியாக உள்ளூர் ஷரீயா நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை  உலகிலுள்ள பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இன்றைய தினம் பிறை பார்க்கும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இன்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ரமழான் நோன்பு இன்று இரவு ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

இதேவேளையில் இலங்கையில் பிறை பார்க்கும் தினமாக நாளை திங்கட்கிழமை 11ஆம் திகதி என்று கொழும்பு பெரியவாசல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வழமைப்போல் இடம்பெறும் என்றும் பிறை சம்பந்தமான தகவல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின் ரமழான் நோன்பு ஆரம்பிப்பதற்கான அறிவித்தலை அம்மாநாட்டு முடிவின் அறிவிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...