ரஷ்யாவில் ஐ.எஸ் அதிரடித் தாக்குதல் – 60 பேர் பலி!

Date:

ரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள பிரபலமான இசை நிகழ்வில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது, இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த செய்தி நிறுவனமான அமாக் வெள்ளிக்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

மொஸ்கோவில் ‘பிக்னிக்’ என்ற இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மர்மநபர்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் “ஒரு வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் புட்டின் தெரிவு செய்யப்பட்ட சில நாட்களில் அதுவும் ரஷ்ய புலனாய்வுப் பிரிவை மீறி இவ்வகையான தாக்குதல் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...