250 கோடி செலவில் ராகம வைத்தியசாலையில் நிறுவப்பட்ட எம்.எச் உமர் ஈரல் பராமரிப்பு நிலையம்!

Date:

இலங்கையில் சிறியவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் நாட்பட்ட ஈரல் நோய் காரணமாக ஈரல் மாற்றுச் சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கென ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் ஈரல் பராமரிப்பு நிலையமொன்று நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தினை ப்ரான்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் எம் எச் ஒமர் மன்றம் 250 கோடி ரூபா செலவில் நிர்மாணித்திருந்தது.

நிலையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்துக்கு ப்ரான்டிக்ஸின் பங்களிப்பைப் பாராட்டியதோடு குறித்த நிலையத்தை நிறுவியமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

நிகழ்வில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ப்ரானெ்டிக்ஸின் பணிப்பாளர்களுள் ஒருவரான எம். எச். உமர் அவர்களின் பேரர் ஹஸீப் உமர் உட்பட வைத்தியசாலையினதும் பல்கலைக்கழகத்தினதும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...