93 நாடுகளில் இப்தார் நிகழ்வுகளை மேற்கொண்ட சவூதி அரேபியா!

Date:

சவூதியின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தஃவா வழிகாட்டல் அமைச்சு மற்றும் சவூதி தூதரகங்கள் அனுசரணையுடன் 93 நாடுகளில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகள்  நடைபெற்றுள்ளதாக  உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து இம்ரான் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரசாங்கம் வழமையாக அனைத்து நாடுகளுக்கும் பேரித்தம் பழங்களை அனுப்பி வைப்பது வழமை.

ஆனால் வழமைக்கு மாற்றமாக இம்முறை இலவசமாக பேரித்தம் பழங்களை வழங்கியதுடன் சவூதியின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தஃவா வழிகாட்டல் அமைச்சு மற்றும் சவூதி தூதரகங்கள் அனுசரணையுடன் 93 நாடுகளில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வுகளில் உலமாக்கள், புத்திஜீவிகள் ,சமுக சேவையாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

2024ம் ஆண்டின் ரமழான் முதல் பத்து தினங்களிலும் ஒரு மில்லியனையும் தாண்டிய எண்ணிக்கையினர் இதன் மூலம்பலன் பெற்றுள்ளனர் என அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

மனித நேயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் சவூதி அரேபியாவின் வேலைத்திட்டங்கள் சிறந்த திட்டங்களாக அமைந்துள்ளன.

மன்னர் சல்மானின் போற்றத்தக்க இவ்வாறான பணிகள் என்றும் தொடர வாழ்த்துவதுடன் இப்புனித ரமழானில் இப்பணிகள் தொடர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...