கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஒருவரும், மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப்பின் உதவியோடு தாம் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, வழிதவறி அலரி மாளிகை மதிற்சுவர் அருகே சென்றுள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் மதிற்சுவர் ஏறி அலரி மாளிகைக்குள் குதிக்க முற்பட்டுள்ளனர்.
அதன்போது, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவின் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூலம்: லங்காதீப