IMF இன் 33% கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியது இலங்கை!

Date:

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகளில் 33 வீத கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்ற தவறியுள்ளதாக Verité Research குறிப்பிட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத கடப்பாடுகளில் தகவல்களை வெளியிடுதல் (வெளிப்படைத்தன்மை) மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான கடப்பாடுகள் அடங்குகின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முறையற்ற நிர்வாக திறனே முக்கிய காரணம் என்பதை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையிலான நிர்வாகத் திறனை கண்டறியும் முதல் ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் கிடைக்கப்பெற்றது.

இதற்கமைய புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை பெப்ரவரி மாத இறுதிக்குள் 45 கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்.இந்நிலையில், 14 (31%) நிறைவேற்றப்பட்ட கடப்பாடுகளாவும் 15 (33%) நிறைவேற்றப்படாத கடப்பாடுகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள நிறைவேற்றப்பட வேண்டிய 16 (36%) கடப்பாடுகள் தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

நிறைவேற்றப்படாத” 15 கடப்பாடுகளில் ஆறு கடப்பாடுகள் தகவல்களை வெளியிடுவது ( வெளிப்படைத்தன்மை) தொடர்பான உறுதிமொழிகளாகும்.

இவற்றில் நான்கு தொடர்பான நடவடிக்கைகளாகும்:

(1) வங்கிச் சட்டம் குறித்து பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுதல்

(2) பணவீக்கத்திற்கு ஏற்ப தானியங்கி முறையில் கலால் வரிகளை குறியீடு செய்வதை அறிமுகப்படுத்துதல்

(3) கடன் முகாமைத்துவ முகவர் நிலையமொன்றை அமைப்பதற்கு சட்ட ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துதல்.

(4) அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.

(மேற்குறிப்பிட்ட நான்கு விடயங்களும் புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்வதாகும்)

2022 செப்டம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட போதிலும், நிர்வாக சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நான்கு நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...