ராகம போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
50 வயதுடைய குறித்த நோயாளி தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.