இன்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய பெட்ரோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபா ஆகும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்று 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 386 ரூபா ஆகும்.
இதேவேளை மண்ணெண்ணெய் விலை லீட்டர் ஒன்று 12 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.