தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கனடா சென்ற அனுரவுக்கு விமான நிலையத்தில் புலம்பெயர் மக்கள் பிரமாண்ட வரவேற்பை அளித்துள்ளனர்.
23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் டொரொன்டோ மற்றும் நிவ்வெஸ்ட் மினிஸ்டர் பகுதிகளில் பிரமாண்ட கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டொரொன்டோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பெருமளவான தமிழ் மக்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் அனுரவின் கனடாவுக்கான பயணமும் இலங்கையில் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் அனுர கலந்துரையாட உள்ளதாக அறிய முடிகிறது.