சகல பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீர்மானம்: கல்வி அமைச்சர் சுசில்

Date:

மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை,  மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான பாடசாலைகளாக  சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற  நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மறுசீரமைப்பு கொள்கை வரைவில் தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளை ஒரே விதமாக கொண்டு வருவது தொடர்பில் யோசனைகள்  காணப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான தெரிவுக்குழுவில்  இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. இதனை ஒரே தடவையில் மேற்கொள்வது கடினம். எனினும், படிப்படியாக கட்டம், கட்டமாக  இதனை மேற்கொள்ள முடியும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...