எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
“இந்நாட்களில் ஆட்டோ டீசல்களின் தரத்தில் சிக்கல் உள்ளது. இது குறித்து சட்டப்பூர்வ பெட்ரோலிய நிறுவனத்திடம் தொடர்ந்து தெரிவித்தும் தரம் குறித்து எங்களுக்கு உறுதி அளிக்கப்படவில்லை. பேருந்துகள் தற்போது நட்டத்திலேயே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.