அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தின் ஏற்பாட்டில் மார்ச் 3 ஆம் திகதியன்று தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கஹட்டோவிட்ட கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துட் சமத் அவர்கள் கலந்துகொண்டதோடு விசேட பேச்சாளராக சமூக வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எஸ்.எம். பாஹிக் அவர்களும் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினார்கள்.
இவ்வைபவத்தில் சிறப்பு அதிதிகளாக கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மீர் அவர்களும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். சர்ஜுன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2023 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அல்பத்திரியா மகா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் இவ்வைபவத்தின் போது விசேட உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஷாபி நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் அவர்கள் இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.