வடமாகாண பிரதம செயலாளராக இளங்கோவன்

Date:

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதம  செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின்
செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  நேற்று (12)
கையளித்தார்.

அதற்கமைய வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோவன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே. குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார்.

எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை,
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக
பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...