சகவாழ்வை பலப்படுத்திய மற்றொரு இரத்ததான முகாம்!

Date:

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த இரத்தத் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கௌரவத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜிதேரர் அவர்களின் தலைமையில் இயங்கும் தர்ம சக்தி நிறுவனமும்,கொள்ளுப்பிட்டி மஜ்ஸித் சம்மேளனமும் புத்தளம் நகர சபையுடன் இணைந்து சிறப்பான இரத்ததான முகாமை நேற்றைய தினம் புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடாத்தியது.

தர்மசக்தி நிறுவனத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ருமைஸ், கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ரிஸான் மற்றும் சர்வசமய பிரமுகர்கள் உட்பட பிரதேசத்தின் சகவாழ்வு பணியில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள்இ இளைஞர்கள்என பல்வேறு தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

50 இற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் தமது இரத்தங்களை தானம் செய்து வைத்தியசாலையின் இரத்தத்தட்டுப்பாட்டை நீக்குவதற்காக பங்களிப்பு செய்தமையை குறித்து தர்ம சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திரு. ஏசி.எம். ருமைஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...