சமூக ஒற்றுமையைப் பலப்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கு சூபி ஆன்மீகப் பேரவை இப்தார் ஏற்பாடு

Date:

இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கும் அமைப்புக்களுக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவையின் இப்தார் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவையின் தலைவர் கலாநிதி மௌலவி அல்ஹாபில் அப்துல்லாஹ் நூரி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வு இன்று (03) புதன்கிழமை குப்பியாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இறுதியில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அகில இலங்கை சூபி ஆன்மீக பேரவைக்கு இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன் கலந்துகொண்ட ஏனைய அங்கத்துவ அமைப்பினருக்கும் இந்நிகழ்வு நடைபெற்ற குப்பியாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் உட்பட உத்தியோகத்தர்கள், சூபி தரீக்காக்கள், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத் அங்கத்தவர்கள் உட்பட பேரவையின் முக்கியமான அமைப்புக்களின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வெளியிட்ட அனைவரும் இந்த ஒற்றுமைப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும் அதற்கான ஒத்துழைப்புக்களை தங்கள் அனைவரும் வழங்குவதாகவும் இலங்கை முஸ்லிம் சமூகம் இதற்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...